Monday, March 8, 2010

51 அடி உயர கருமாரி அம்மன் சிலை




செங்கல்பட்டு அருகே ‌திருவடிசூல‌ம் எ‌ன்ற ‌‌கிராம‌த்‌தி‌ல் 51 அடி உயரத்தில் விசுவரூப தேவி கருமாரி அம்மன் சிலை அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கா‌ட்டா‌ங்குள‌த்தூ‌ர் ஒ‌ன்‌றிய‌த்‌தி‌ல் அமை‌ந்து‌ள்ளது இ‌ந்த ‌திருவடிசூல‌ம் ‌கிரா‌ம‌ம். இ‌ந்த ‌கிராம‌த்‌தி‌ல் 2 ஏ‌க்க‌ர் ‌நில‌ப்பர‌ப்பள‌வி‌ல் ரூ.25 கோடி ம‌தி‌ப்‌பி‌ல் தே‌வி கருமா‌ரி அ‌ம்மனு‌க்கு ‌பிர‌ம்மா‌ண்டமான கோ‌யி‌ல் க‌ட்ட‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

இ‌ந்த கோ‌யிலு‌க்காக வடிவமை‌க்க‌ப்ப‌ட்ட 51 அடி உயரமு‌ம், 22 அடி அகலமு‌ம் கொ‌ண்ட தே‌வி கருமா‌ரி அ‌ம்ம‌னி‌ன் ‌சிலை நே‌ற்று மு‌ன்‌தின‌ம் இரவு ‌பிர‌திஷ‌்டை செ‌ய்ய‌ப்ப‌ட்டது. அதுவரை அங்கு 3 அடி உயரத்தில் இலுப்பைப்பூ மரத்தால் ஆன கருமாரி அம்மன் சிலையை வைத்து வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

webdunia photo WD
இ‌ந்த ‌‌சிலை செ‌ய்வத‌ற்காக 600 ட‌ன் எடையு‌ள்ள கரு‌ங்க‌ல் ‌திருவடிசூல‌ம் பகு‌தி‌க்கு கொ‌ண்டு வர‌ப்ப‌ட்டு கட‌ந்த ஓரா‌ண்டுகளாக ப‌ணிக‌ள் நடைபெ‌ற்று வ‌ந்தன. ‌சி‌ற்‌பிக‌ள் ராஜா‌ங்க‌ம், த‌த்துராம‌ன், பரம‌சிவ‌ம், ச‌ண்முக‌ம் ஆ‌கியோ‌ர் ‌சிலை வடி‌க்கு‌ம் ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டு வ‌ந்தன‌ர்.

இந்த சிலையை நிறுவி கோவில் கட்டும் பணியை திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் அறக்கட்டளை மேற்கொண்டு உள்ளது.

இந்த அறக்கட்டளையின் தலைவர் மதுரை முத்து சுவாமிகள் மேற்கண்ட தகவலை தெரிவித்தார். அவருடைய முன்னோர்கள் தான் திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலை கட்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் ஆசிரியர் பயிற்சி முடித்து இருந்தபோது 27-வது வயதில் கருமாரி அம்மன் விசுவரூப தரிசனம் கிடைத்தது என்றும், அதன்படி இந்த சிலை வடிவமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பெண் தெய்வத்திற்கு 51 அடி உயர சிலை உலகிலேயே வேறு எங்கும் கிடையாது என்றும் அவர் கூறினார்.

3 comments:

  1. wow gud gud

    அன்னையின் மகிமை நிறைந்த இந்த கோவிலுக்கு நானும் குடும்பத்துடன் சென்று தேவி தரிசம் பெற்று வர விரும்புகின்றேன்:)

    எல்லாம் அவர் வகுத்துவிட்ட வழி....

    Thank u for ur info

    ReplyDelete
  2. Its amazing thank you for ur wonderful work. I will visit that place as soon as possible.

    ReplyDelete
  3. Its amazing thank you for ur wonderful work. I will visit that place as soon as possible.

    ReplyDelete